கந்துவட்டி கார்ட்டுன் விவகாரம்: கார்ட்டுனிஸ்ட் பாலாவின் விளக்கம்

கந்துவட்டி கார்ட்டுன் விவகாரம்: கார்ட்டுனிஸ்ட் பாலாவின் விளக்கம்
கந்துவட்டி கார்ட்டுன் விவகாரம்: கார்ட்டுனிஸ்ட் பாலாவின் விளக்கம்

கந்துவட்டி கார்ட்டுன் தனிப்பட்ட வகையில் யாரையும் குறிப்பிட்டு வரையவில்லை என்றும், அது அரசாங்கத்தின் மீது வெளிப்படுத்தப்பட்ட கோபம் என்றும் கார்ட்டுனிஸ்ட் பாலா தெரிவித்தார்.

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து பாலா கார்ட்டுன் ஒன்றினை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சித்து அந்தக் கார்ட்டுன் வரையப்பட்டிருந்தது. இந்த கார்ட்டுன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் கருத்து சுதந்திரம் குறித்து, பாலாவின் கைது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் போது கருத்து சுதந்திரத்தின் எல்லை குறித்து பாலாவிடம், நெறியாளர் கார்த்திகைசெல்வன் கேள்வி எழுப்பினார். அதற்கு காணொளி வாயிலாக பதிலளித்த பாலா, தான் தனிப்பட்ட வகையில் யாரையும் வரையவில்லை என்றும், நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தமிழக அரசாங்கத்தை நிர்வாணப்படுத்தம் வகையில் அமைந்ததால் அதையே தான் வரைந்ததாகவும் கூறினார். அத்துடன் கவர்ச்சி நடிகையின் படத்தை தான் வரையவில்லை என்றும், அரசாங்கத்தின் மீதான கோபத்தையே கார்ட்டுனாக வரைந்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com