சென்னையில் வீட்டிலேயே "கேரட் பீர்" தயாரித்த நபர் கைது !

சென்னையில் வீட்டிலேயே "கேரட் பீர்" தயாரித்த நபர் கைது !

சென்னையில் வீட்டிலேயே "கேரட் பீர்" தயாரித்த நபர் கைது !
Published on

சென்னையில் தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறகது. இன்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 138 பேர் கொரானாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களில் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை இருப்பதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுவுக்கு அடிமையானவர்கள் சிலர் யூடியூப் பார்த்து மதுவை வீட்டிலேயே தயாரிக்கின்றனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் சிலர் போதை பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தெய்வேந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் நடத்திய தீவிர சோதனையில் சுனாமி குடியிருப்பு இ பிளாக் பகுதியை சேர்ந்த மரியதாஸ்(34) என்பவர் வீட்டில் கேரட் பீர் தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 லிட்டர் கேரட் பீரை பறிமுதல் செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com