சென்னை: விமான நிலையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: விமான நிலையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: விமான நிலையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலையில் இன்று இரவு மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட காரின் உரிமையாளர் சூரஜ் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறினார். அப்போது காரின் முன்புறத்தில் பற்றிய தீ மளமளவென பரவி கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. கரும்புகையைக் கண்ட சூரஜ், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீனம்பாக்கம் போலீசாரும், விமான நிலைய தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு காரில் பற்றியெரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த விபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தாலும், விபத்தை ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு வீடியோ எடுக்க முற்பட்டதாலும் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் #Carfire | #Chennai pic.twitter.com/VEnYVSfDeh
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 3, 2021

இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீப நாட்களாக சாலையில் செல்லும் வாகனங்களில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com