\
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்து எரிந்த கார்: போலீசார் விசாரணை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்து எரிந்த கார்: போலீசார் விசாரணை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்து எரிந்த கார்: போலீசார் விசாரணை
Published on

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (33). இவர் மாங்காட்டைச் சேர்ந்த சாதிக் என்பவரின் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சாதிக்கின் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய மனைவியின் பிரசவத்திற்கு சரவணன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, தான் வந்த காரிலேயே நேற்றிரவு சரவணன் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனே சரவணன் காரில் வெளியேறினார். இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com