ஆட்டோக்கள் மீது கார் மோதி விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழப்பு

ஆட்டோக்கள் மீது கார் மோதி விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழப்பு

ஆட்டோக்கள் மீது கார் மோதி விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழப்பு
Published on

ஈசிஆர் சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் முன்னால் சென்ற இரண்டு ஆட்டோக்கள் மீது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்துக்காக காத்திருந்த தோட்ட காவலாளியான வட மாநிலத்தைச் சேர்ந்த சாம்பலால் (55) மற்றும் அதே பகுதியில் வேலைசெய்யும் வாயலூர் கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை (52) என்ற பெண்ணும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து பிரேதத்தை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com