திருப்பூர் அரசுப் பேருந்து - கார் விபத்து
திருப்பூர் அரசுப் பேருந்து - கார் விபத்துபுதிய தலைமுறை

நேருக்கு நேர் மோதிய அரசுப் பேருந்து - கார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியான சோகம்!

திருப்பூர் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூரை சேர்ந்தவர்கள் சந்திரசேகர் - சித்ரா தம்பதி. இவர்கள் தங்களின் 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்துள்ளனர். இன்று அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்திரசேகர் ஓட்டி சென்ற கார் மீது மோதியுள்ளது.

திருப்பூர் அரசுப் பேருந்து - கார் விபத்து
திருப்பூர் அரசுப் பேருந்து - கார் விபத்து

இதில் காரில் பயணித்த சந்திரசேகர், சித்ரா மற்றும் இளைய மகன் இளவரசர், மூத்த மருமகள் ஹரிவித்ரா, மூன்று மாதமேயான பேத்தி சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயர்களுடன் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

திருப்பூர் அரசுப் பேருந்து - கார் விபத்து
மதுரை: பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 67 கிலோ தங்க நகைகள், உரியவர்களிடம் ஒப்படைப்பு

இதனையடுத்து, உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து தற்போது, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவத்தை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com