அதிமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து அவசர கதியில் பேச முடியாது – அண்ணாமலை
செய்தியாளர்: பிரவீண்
சென்னையில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்த கொள்வற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து விமான மூலம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அதிமுக உடனான கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து அவசர கதியில் தற்போது பேச முடியாது. சென்னையில் இது குறித்து விரிவாக பேச இருக்கிறேன் என்றார்.
அமித் ஷா கடந்த வாரம் வந்து சென்ற பிறகு தான் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்வதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் 2 நாட்களில் மீண்டும் அமித்ஷா தமிழ்நாடு வர உள்ளார் பிறகு எத்தனை மாற்றங்கள் வரும் என்றார்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி என்னை அழைத்தார்கள் நான் சென்றிருந்தேன் அதைக் கூட தவறு என்றால் எப்படி. என்றவரிடம் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாதது தொடர்பாக கேட்டபோது, அவர் திருமண வரவேற்பில் பங்கேற்பார் என்றார்.