அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது
அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாதுமுகநூல்

அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது.... மறுத்த உயர்நீதிமன்றம்!

அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது . என்ன காரணம்.
Published on

செய்தியாளர்: சுப்பையா

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள்  குறித்த  ஆட்கொணர்வு  வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது .

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் விட்டு பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் இருவரின்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்னர்.

சீமான் தரப்பு

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அமரவும் முன்பு, விஜயகுமார் என்ற வழக்கறிஞர் ஆஜராகி,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் காவல்துறை அத்துமீறி உள்ளதாகவும் இரண்டு பேரை அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளதாகவும், இதுகுறித்து  ஆட்கொணர்வு வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது
" எடப்பாடி எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறாரோ.."- டங்க் ஸ்லிப்பான திண்டுக்கல் சீனிவாசன்

நீதிமன்றம் சொல்லதென்ன?

அதற்கு நீதிபதிகள் போலீசார் கைது செய்தால் 24 மணி நேரம் அவர்களுக்கு உள்ளது . 24 மணி நேரத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள், எனவே அதையெல்லாம் நீங்கள் சரிபார்த்த பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறி அவசரமாக வழக்கை  விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com