இன்று நடைபெற்ற குரூப்2 தேர்வு பாதியில் நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் வேதனை
இன்று நடைபெற்ற குரூப்2 தேர்வு பாதியில் நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் வேதனைweb

குரூப்-2 தேர்வு ரத்து | ’3 வருஷமா கஷ்டப்பட்டேன்.. வினாத்தாள் ஈஸியா இருந்தது’ - தேர்வர்கள் வேதனை

குரூப்-2 தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு தேர்வர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, 3 வருடமாக படித்துவருகிறோம், வினாத்தாள் ஈஸியாக இருந்தது, இப்போது ரொம்ப கஷ்டமா இருக்கிறது என தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..
Published on
Summary

தமிழ்நாட்டில் குரூப்-2 தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டது. தேர்வர்கள், '3 வருடம் கஷ்டப்பட்டோம், வினாத்தாள் ஈஸியாக இருந்தது' என வேதனை தெரிவித்தனர். தேர்வு மையங்களில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன்படி, சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 2 தேர்வும், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2A தேர்வும் நடைபெறுகிறது. அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல லட்சம் தமிழக இளைஞர்கள் ஆண்டு தோறும் குரூப் தேர்வுகளை எழுதி வருகின்றனர். 

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்x

அந்தவகையில் 828 அரசுப் பணியிடங்களுகாக கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-ன் முதல் நிலைத்தேர்வு நடந்தது. மொத்தமாக 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில், குரூப் 2-இல் 1126 பேரும், குரூப் 2 ஏ-இல் 9,457 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்தநிலையில் தான், தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவது இன்று நடைபெற்றது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி வினாத்தாள், விடைத்தாள் இரண்டும் கொடுக்கப்பட்ட பிறகு, மீண்டும் அவை திரும்ப வாங்கப்பட்டு தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தேர்வு நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன?

இன்று தேர்வு நடைபெறுவதற்கு போகும் முன் தேர்வர்களுக்கு தேர்வுமையங்கள் குறிப்பிட்டு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுதப் போகும் போது திடீரென தேர்வு மையங்கள் மாற்றப்பட்டிருந்தது தேர்வர்களுக்கு தெரிய வந்தது. நந்தனம் தேர்வு மையத்தில் வினாத்தாளே வரவில்லை எனவும் புகாரெழுந்தது.

இதையடுத்து தேர்வெழுதச் சென்றவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்வு மையங்களில் நடந்த குளறுபடிகள் காரணமாக இன்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்ர்.

இந்தசூழலில் தேர்வறையிலிருந்து தேர்வர்கள் பாதியிலேயே வெளியேற்றப்பட்டதை அடுத்து, சிலர் ‘3 வருடமாக படித்துவருகிறோம், வினாத்தாளும் ஈஸியாகவே இருந்தது, எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாம் என்று நம்பிக்கையிலிருந்தபோது, இப்படி வெளியேற்றிவிட்டனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com