மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு

மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு

மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு
Published on

மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு இரவுநேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியது. அதனைத்தொடர்ந்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அரசு தடைவிதித்தது. இந்தநிலையில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அந்தநாளில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை எனவும்  அவர்கள் தேர்தல் ஆணையம் தந்த விதிமுறைகள் செயல்படுத்தபடுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com