நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
Published on

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று அவை பரிசீலனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வந்த நிலையில், கடைசி நாளில் காலை முதலே அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் விறுவிறுப்பாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. எனினும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் 5 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதையும் படிக்க: வந்தவாசி: அதிமுக சார்பில் மகள்.. சுயேட்சையாக போட்டியிடும் தாய் - ஒரே வார்டில் மோதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com