பதாகையுடன் நின்ற கேன்சர் நோயாளியின் நண்பர்கள்.. காரை நிறுத்திய ஜெகன்மோகன் ரெட்டி..!
கேன்சர் நோயாளியின் நண்பர்கள் சிலர் பதாகையுடன் விமான நிலைய சாலை அருகே நின்ற நிலையில், அவரை கவனித்த ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக வண்டியை நிறுத்தினார்.
ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் சென்றது. அந்த நேரத்தில் சாலை அருகே இளைஞர்கள் சிலர் பதாகையுடன் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களை கவனித்த ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக கான்வாயை நிறுத்தச் சொன்னார்.
தொடர்ந்து காரிலிருந்து இறங்கிய ஜெகன்மோகன் ரெட்டி அவர்களிடம் என்ன பிரச்னை என்று கேட்டார். தங்களது நண்பரான நீராஜ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்ப வறுமை காரணமாக சிகிச்சை பெற பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அந்த இளைஞர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உடடினயாக சம்பந்தப்பட்ட கேன்சர் நோயாளிக்கு, மாநில அரசு சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை உடனடியாக செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.