சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Published on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. ‌இந்த நிகழ்ச்சியை தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு, நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்கு, ஓட்டப்பந்தயத்தில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பேசிய நடிகர் அரவிந்த் சாமி, குழந்தைகள் விளையாடுவதற்கு அதிக விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்தார். மாணவர்கள் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ஏடிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com