பாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு

பாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு

பாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு
Published on

திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி நிர்வாகிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால், அங்கு பயின்ற மாணவர்களை கோவை மாவட்டத்திலுள்ள காதுகேளாதோர் பள்ளியில் சேர்க்க ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி. மாற்றுத்திறனாளியான இவர் நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த அந்தச் சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது. 

இந்தப் புகாரில் பள்ளி நிறுவனர் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதனால், பள்ளியின் அங்கீகாரத்தை மாநில மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளியில் பயின்று வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களை கோவை மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளி மற்றும் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com