நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உயிரிழந்த பிரதீபாவின் தந்தை கோரிக்கை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உயிரிழந்த பிரதீபாவின் தந்தை கோரிக்கை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உயிரிழந்த பிரதீபாவின் தந்தை கோரிக்கை
Published on

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவி பிரதீபாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்த பிரதீபா, பத்தாம் வகுப்பின் போது அரசு பள்ளியில் படித்து, பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். அவரது மருத்துவப் படிப்பு கனவை உணர்ந்த பெற்றோர் வறுமையிலும், மேல்நிலைப் பள்ளிபடிப்பிற்காக தனியார் பள்ளியில் சேர்த்தனர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த பிரதீபா, 12ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார்.  இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற பிரதீபா தோல்வி அடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரதீபா அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவி பிரதீபாவின் தந்தை சண்முகம் இதுகுறித்து கூறும்போது, “ நீட் தேர்வால் என் மகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதற்கு காரணமான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்தார். இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com