10 ஆயிரம் சம்பளத்தில் குடும்பத்தை காப்பற்ற முடியுமா?’ ஆட்சியரை அதிரவைத்த பெண்!
10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? இது என்ன அரசு வேலையா? என்று வாணியம்பாடியில் நடைபெற்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரை கேள்விக் கேட்டு மாற்றுத்திறனாளி பெண்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு பதிவுத்துறை மற்றும் பயிற்சித்துறை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியோர் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் படித்து முடித்த வேலை வாய்ப்பற்ற பெண்கள் ,ஆண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு அரசு வேலைவாய்ப்புதுறை அலுவலகம் மூலம் தொழிற்சாலைக்கு தகுதியுள்ளவர்களை நேர்காணல் நடத்தின. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டு வேலைவாய்ப்பு விண்ணப்பம் அளித்துள்ள அனைவரிடமும் தங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் திருப்திகரமாக உள்ளதா எனக் கேட்டறிந்தார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்குச் சென்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அதிகாரிகள் அப்போது அங்கு இருந்தவர்களிடம் வேலைவாய்ப்பு முகாம் பற்றி கேட்டார் அப்போது ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரை தனக்கு 25 நாளில் நல்ல ஒரு வேலையை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் தற்போது உங்களுக்கு வேலை தயாராக உள்ளது 10 ஆயிரம் சம்பளத்தில் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தபோது ’பத்தாயிரம் ரூபாய் விடுதி கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு சரியாய் போய்விடும் குடும்பத்திற்கும் கொடுத்து உதவ முடியாது. இது என்ன அரசு வேலையா?’ என்றுக்கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் இருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தார். ‘பின்னர் உரிய நேரத்தில் உங்களுக்கு கேட்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை அதிகாரிகள் ஏற்படுத்தித் தருவார்கள்’ என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.