கூட்டணியின்றி காங்., வெற்றி பெற முடியாதா?: கே.எஸ்.அழகிரி
கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாதா என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “கட்டுப்பாட்டு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது. 50 ஆண்டுகளாக பார்க்கிறேன் மேடை கட்டுபாடு என்பது நம்மிடம் இல்லை. இது காமராஜரின் காங்கிரஸ். அவரது பெருமை என்னவென்று சொன்னால், அவர் தனி மனிதனாக இந்த மண்ணில் கால் பதித்தார். காங்கிரஸ் கட்சியின் மேடையை கூட சரிசெய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறோம். மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது
.
வாக்குச் சாவடியை கைப்பற்ற முடியாவிட்டாலும், பாதுகாக்கும் ஆற்றல் இருக்கிறதா ? குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியுமா ? இது போன்ற கேள்விக்கு பதில் கிடைக்க விவாதிக்க வேண்டும். இல்லாமல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்து விடலாம் என நினைத்தால் அது நடக்கவே நடக்காது.
தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடி. அதனை மேலும் பலத்தபடுத்தவே இந்த கூட்டம். நாம் 50 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருப்பது ஏன் ? கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலியில் பலம் இருந்தும் கூட ஏன் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா ? கூட்டணி இன்றி வெற்றி பெற முடியாதா ? என்பதற்காக தான் இந்த கூட்டம்” என்று தெரிவித்தார்.