மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. ஓய்ந்தது பரப்புரை.. விடுதிகளில் காவல்துறை அதிரடி சோதனை!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு சென்றதையடுத்து அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். இதையடுத்து, திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தவிர்த்த மற்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் (அக்டோபர் 6) நடைபெறவிருக்கிறது.
இந்தச்சூழலில் தான், கடந்த 25 நாட்களாக நடந்து வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்திருக்கிறது. இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில், தங்கியுள்ள வெளியூர் நபர்கள், சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்குறிமை இல்லாத கட்சி நிர்வாகிகள் மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வாக்கு பதிவு மறுபடியும் வெளியூர் நபர்களை யாரையும் விடுதிகளில் தங்க வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

