\
வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..!

வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..!

வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..!
Published on: 

மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே சுகப் பிரசவம் நிகழ்வதற்கான இலவச பயிற்சி முகாம் கோவையில் நடைபெறுவதாக வெளியாகியுள்ள அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்’ என்ற பெயரில், நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் என எதுவுமே எடுக்காமல், மருத்துவரிடமும் செல்லாமல், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் என்றும், இதுவே சிறந்த வழிமுறை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி முகாம், வரும் 26-ஆம் தேதி கோவைபுதூரில் நடைபெறும் என்றும், அப்போது வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிகாட்டுதல்கள் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் திருப்பூரில் இயற்கை ம‌ருத்துவம் என்ற‌ பெயரில், கணவரே வீடியோவைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்டபோது, கிருத்திகா என்ற பெண் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சுகப்பிரசவ பயிற்சி முகாம்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com