'திருக்குறள் போதிப்பது வாழ்க்கை முறை மட்டுமல்ல, ஆன்மிகத்தையும்தான்' ஆளுநர் ஆர்.என்.ரவி

'திருக்குறள் போதிப்பது வாழ்க்கை முறை மட்டுமல்ல, ஆன்மிகத்தையும்தான்' ஆளுநர் ஆர்.என்.ரவி
'திருக்குறள் போதிப்பது வாழ்க்கை முறை மட்டுமல்ல, ஆன்மிகத்தையும்தான்' ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு வளர்ச்சி அடைய அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து பேசும்நிலையில் அரசியலுக்காக இதனை வெறும் வாழ்கை நெறிமுறை புதக்கமாக கூறி வருகின்றனர் ’’ என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது , ‘’ தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு முதல் முதலாக பரிசாக அறிமுகம் செய்யப்பட்ட புத்தகம் திருக்குறள் தான், மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட 12க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உதவியோடு ஒவ்வொரு திருக்குறளின் முழு அர்த்தத்தையும் தெரிந்து வருகிறேன். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தத்தை கண்டு நான் வியந்துள்ளேன்,திருக்குறள் பக்தியில் துவங்கி ஒருவர் பிறந்தது முதல் இறப்பு வரை எப்படி ஐந்து புலன்களை கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பது வரை திருக்குறள்  பேசுகிறது.

திருக்குறளை தொடர்ச்சியாக வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் வெளியே கூறி வருகின்றனர்,உண்மையில் திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து பேசுகிறது, அரசியலுக்காக ஆன்மிகம் குறித்து ஒரு சிலர் உண்மையை பேச மறுக்கின்றனர். இது திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U.POPE முதல் துவங்குகிறது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என தெரியும் ஆனால் அதனை அவர் PRIMAL DUTY என வேண்டும் என்றே மாற்றி எழுதியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் "இந்தியாவின் அடி நாதமாக உள்ள ஆன்மிகம் குறித்து இந்த புத்தகம் பேசுவதை அரசியலுக்காக வெளியே பேசவில்லை என்றும் உண்மையாக அர்த்தம் தெரிந்து பேசும் அனைவருக்கும் திருவள்ளூர்வர் பேசியுள்ள ஆன்மிகம் குறித்து புரியும். இந்தியா வளர்ந்து கொண்டு உள்ளது, 2047ம் ஆண்டு இந்தியா உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளர கூடாது, நாடு வளர வளர ஆன்மிகமும் வளர வேண்டும். திருக்குறலுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் அதனை யாராலும் தடுக்க முடியாது, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளி வந்தே தீர வேண்டும்.

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதக்கங்களை நான் படித்தேன் ஆனால் திருக்குறளின் உண்மை நிலையை அந்த புத்தக்கங்கள் பேசவில்லை எனவே திருக்குறளின் புத்தக்கதை முழுமையாக மொழி பெயர்க்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com