மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை..!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை..!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை..!
Published on

ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார்.

காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் அவர் கலைவாணர் அரங்கம் சென்று, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை தொடங்கி  வைக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் முதல் தவணைக்கான நிதி பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்பின் தெற்கு ரயில்வேயில் என்எல்சி சார்பில் 200 கழிப்பறைகளை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் அவர், கிண்டி ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால கட்டுமான பணிகளையும் துவக்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com