\
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம்
Published on

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், பிற பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 15 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பதினாறவது சட்டமன்ற பேரவையில் முதல் கூட்டத்தொடர் 2021- ஆம் ஆண்டு மே திங்கள் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறும் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவைத்தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் மே 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com