\
முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: ஒரு மூட்டை ரூ.100க்கு விற்பதால் கவலை

முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: ஒரு மூட்டை ரூ.100க்கு விற்பதால் கவலை

முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: ஒரு மூட்டை ரூ.100க்கு விற்பதால் கவலை
Published on: 

தருமபுரி மாவட்டத்தில் முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாலக்கோடு, காரிமங்கலம், மாரன்டஹள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீரில் விளையும் முள்ளங்கி, காலிபிளவர், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்போது முட்டைகோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால்,மூட்டைக்கு 100 ரூபாய் அளவிற்கு ‌விலை குறைந்துள்ளது. இதனால் கூலிக்குக் கூட கட்டுப்படியாகாத நிலை இருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com