தொலைபேசியில் மிரட்டி நிம்மதியை கெடுத்தனர்: சி.ஆர்.சரஸ்வதி போலீசில் புகார்

தொலைபேசியில் மிரட்டி நிம்மதியை கெடுத்தனர்: சி.ஆர்.சரஸ்வதி போலீசில் புகார்

தொலைபேசியில் மிரட்டி நிம்மதியை கெடுத்தனர்: சி.ஆர்.சரஸ்வதி போலீசில் புகார்
Published on

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு ஆதரவளித்தற்‌காக தொலைபேசியில் தன்னை சிலர் மிரட்டியதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

‌புதியதலைமுறை‌க்கு அவர் அளித்த பேட்டியில், தொலைபேசியில் ஒரு வாரமாக என்னை மிரட்டி நிம்மதியை கெடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார். சசிகலாவுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பதற்காக மிரட்டிய அவர்கள், ஏன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டீர்களா? என தொலைபேசியில் கேட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்கள் எனவும் சரஸ்வதி தெரிவித்தார். தனக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் பொது வாழ்வில் ஈடுபடும் எந்த பெண்ணையும் இப்படி கேவலபடுத்தக் கூடாது என்று கூறிய அவர், தனக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண்கள் உட்பட அத்துஆதாரங்களையும் காவல்துறையிடம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com