“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்

“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்
“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன்படி ''சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும். சத்தீஷ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும். ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும்'' என்று தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தற்போது அறிவிப்பு இல்லை என்று தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், ''பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாமென தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலைவையில் உள்ளதையும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com