3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாதது ஏன்? - தேர்தல் அதிகாரி விளக்கம்

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாதது ஏன்? - தேர்தல் அதிகாரி விளக்கம்

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாதது ஏன்? - தேர்தல் அதிகாரி விளக்கம்
Published on

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே 23இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், மக்களவை தேர்தலுடன் அனைத்து சட்டப்பேரவை இடைத்தேர்தல்களும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியே இடைத்தேர்வு நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்துள்ளார். 

அதோடு, “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். இலவச திட்டங்கள் வழங்க அனுமதி இல்லை; வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும். தேர்தல் காலத்தில் மதுரையில் கள்ளழகர் விழா நடப்பது பற்றி ஆய்வு செய்யப்படும். பொதுத்தேர்வு, விழாக்கள் குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துரைத்துள்ளோம். தேர்தல் பணிக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் தேவைப்படுவர்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். 

மேலும், “அரவக்குறிச்சியில் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஒட்டபிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் திமுகவின் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதி தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com