ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்: பிரியாணி கடை திறப்பு விழா சலுகையால் குவிந்த மக்கள்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்: பிரியாணி கடை திறப்பு விழா சலுகையால் குவிந்த மக்கள்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்: பிரியாணி கடை திறப்பு விழா சலுகையால் குவிந்த மக்கள்
Published on

புதிய பிரியாணி கடை திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் துவங்கியுள்ள நிலையில், புரட்டாசி விரதம் கடைபிடித்த மக்கள் இன்று அசைவ உணவுக்கு மாறினர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் புதிய பிரியாணி கடை துவங்கப்பட்டது. அதன் துவக்க விழா சலுகையாக ஒரு பிரியாணி ரூ.70க்கு வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் கடை முன் திரண்டனர்.

இதனால் மைசூர் சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானர்கள். கூட்டம் அதிகமானதால் கடையை பூட்டி விட்டு மற்றொரு வழியாக பிரியாணி விநியோகிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com