பேருந்து கட்டணம் உயர்வு: இனி மினிமம் டிக்கெட் 5ரூபாய்
தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை கணக்கில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றியமைக்கப்பட்ட கட்டண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அரசு மற்றும் தனியார் பேருந்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்து கட்டணம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2011நவம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.