தொடங்கியது புதிய பயணம்.. கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு கிளம்பிய SETC பேருந்துகள்!

சென்னையை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த நிலையில் இன்று முதல் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துக்கள் இயங்க தொடங்கியுள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு கிளம்பிய பேருந்துகள்
கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு கிளம்பிய பேருந்துகள்புதிய தலைமுறை

சென்னையை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் இன்று முதல் அரசு விரைவுபோக்குவரத்து கழக பேருந்துக்கள் இயங்க தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ’கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தினை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டு காணப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது மாநகர அரசு விரைவுபோக்குவரத்து கழக பேருந்துக்களும் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கலுக்கு பிறகு அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம்தான் வரும் கோயம்பேட்டிற்கு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டநிலையில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு, 8 நிமிடத்திற்கு ஒரு முறை என்று பேருந்துகள் வந்த வண்ணம் உள்ளன.

கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு கிளம்பிய பேருந்துகள்
”அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்”- சந்திப்புக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின்!

இது முதல் நாள் என்பதால் சற்று பயணிகளுக்கு சிரமம் அளிக்கும் வண்ணம் இருப்பினும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது சற்று மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com