பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த ஒருவாரத்திற்குள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகரம் மற்றும் நகரங்களில் 1 முதல் 20 நிலைகளை கொண்ட வழித்தடத்தில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 12 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறும் மக்களின் குரல்வளையைக் கட்டண உயர்வு நெரிப்பதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.