திருப்பத்தூர்: நடுவழியில் தேங்கிய மழைநீரில் திடீரென சிக்கிய பேருந்து; போராடி இழுத்த மக்கள்

திருப்பத்தூர்: நடுவழியில் தேங்கிய மழைநீரில் திடீரென சிக்கிய பேருந்து; போராடி இழுத்த மக்கள்

திருப்பத்தூர்: நடுவழியில் தேங்கிய மழைநீரில் திடீரென சிக்கிய பேருந்து; போராடி இழுத்த மக்கள்
Published on

திருப்பத்தூர் அருகே ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய நீரில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் வெளியேற முடியாமல் அங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து இருந்து புதுப்பேட்டைக்கு செல்லும் சாலையின் நடுவே TMS பள்ளி அருகே உள்ள ரயில்வே தரை பாலத்தில் சுமார் 4 அடிக்கும் மேலாக மழை நீரும் கழிவு நீரும் தேங்கியுள்ளது.

அப்படி நீரால் தேங்கியிருந்த தரை பாலத்தின் வழியாக, இன்று சாலையை கடக்க முயன்ற தனியார் பேருந்தொன்று, நடுவழியில் நீரில் சிக்கிக்கொண்டது. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் தரைப் பாலத்தை கடக்க முடியாமல் அவதியுற்றனர். பின்பு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பேருந்தை அப்புறப்படுத்திய பின்பு பொதுமக்கள் அதே தேங்கிய நீரில் சாலையை கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த அரசுதரப்பில் உடனடி நடவடிக்கை வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com