கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்ல இனி ரூ.33
பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்ல செலவு இருமடங்கு
உயர்ந்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்ல விரைவு பேருந்தில் இதுவரை ஒருவருக்கு 17 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு
வந்தது. பேருந்து கட்டண உயர்வால், தற்போது தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு செல்ல ஒருவருக்கு 33 ரூபாய் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. எனில் ஒருமுறை வந்து செல்ல ஒருவருக்கு 66 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சராசரியாக ஒருவர் மாதத்தில் 25 நாட்களுக்கு தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு செல்கிறார் எனில் அதற்காக 850 ரூபாயை பேருந்து
கட்டணமாக செலவழித்திருக்கிறார். தற்போது அதே 25 நாள் தினசரி பயணத்திற்கு ஒருவர் ஆயிரத்து 650 ரூபாய் செலவழிக்க வேண்டும்.
இதனால், இனி பேருந்து கட்டணமாக மட்டும் 800 ரூபாய் தொகையை கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.