ஈரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம்..!

ஈரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம்..!

ஈரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம்..!
Published on

ஈரோடு பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்தப்படி பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓடினர்.

ஈரோடு பேருந்துநிலையத்தில் இருந்து சேலத்திற்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்வதற்காக 
ஈரோடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்தின் ஓட்டுநர் அங்கமுத்து மற்றும் நடத்துநர் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் டீ அருந்துவதற்காக அருகில் சென்றிருந்தனர். பேருந்தில் ஒவ்வொரு பயணிகளாய் ஏறி சீட்டில் அமர்ந்திருந்தனர். அந்தநேரத்தில் பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியானது. புகை வெளியே வந்த சில நிமிடங்களிலேயே பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி பேருந்தில் இருந்து கீழே இறங்கி வேகமாக ஓடினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com