பேருந்து கட்டண உயர்வை அறிவித்து புதுச்சேரி அரசு: நள்ளிரவு முதல் அமல்

பேருந்து கட்டண உயர்வை அறிவித்து புதுச்சேரி அரசு: நள்ளிரவு முதல் அமல்
பேருந்து கட்டண உயர்வை அறிவித்து புதுச்சேரி அரசு: நள்ளிரவு முதல் அமல்

புதுச்சேரியிலிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று ‌நள்ளிரவு முதல் இந்த கட்‌டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு கடந்த 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுச்சேரியிலிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக்கழகம் இக்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்குக் கிழக்குக்கடற்கரைச் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக உயர்த்த‌ப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 120 ரூபாயாகவும், பெங்களூ‌ருவுக்கு 290 ரூபாயாகவும், திருப்பதிக்கு 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com