செல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்

செல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்

செல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்
Published on

புதுக்கோட்டையில் செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பற்றிய செய்தியை புதிய தலைமுறை ஒளிபரப்பிய நிலையில், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஆலங்குடியை தாண்டியதும் பேருந்தின் ஓட்டுநர் செல்ஃபோனைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆலங்குடியில் செல்போனை பார்க்கத் தொடங்கிய ஓட்டுநர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக செல்ஃபோனை பயன்படுத்தியபடியே பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில், மூக்கையா என்ற அந்த ஓட்டுநரை ஒரு மாதத்திற்கு பணி இடைநீக்கம் செய்து புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com