போலீஸ் என்று கூறி கைதி வீட்டில் பணம் பறிக்க முயன்றவர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மருத்துவர் வீட்டில் காவலர் எனக்கூறி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
தாரமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வீட்டுக்கு காவலர் உடையில் வந்த ஒருவர், தான் சேலம் சிறையில் காவலராகப் பணியாற்றி வருவதாகவும், பணம் கொடுத்தால் மருத்துவர் சீனிவாசனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதாகவும் கூறி பணம் கேட்டுள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்ட மருத்துவரின் உறவினர்கள் அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணையில் அவர் ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அரசு ஒட்டுனர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே மருத்துவர் சீனிவாசன் வீட்டிற்கு போலீஸ் உடையணிந்த ஒருவர் சென்றுள்ளார். அங்கேயுள்ள அவரது உறவினர்களிடம் தான் சேலம் சிறையில் காவலராக பணியாற்றி வருவதாகவும், பணம் கொடுத்தால் சிறையில் மருத்துவர் சீனிவாசனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், சிறையில் உங்கள் கணவரை அடிக்காமல் கவனித்து கொள்ளவும் தேவையான உணவுகளை வழங்கவும் பணம் கொடுங்கள் என்றும் கேட்டுள்ளார். ஆனால், அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளால் சந்தேகமடைந்த அவர்கள் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை பிடித்து தாரமங்கலம் போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு நகரை சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்தது. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அங்கே சரியாக வேலைக்கு செல்லாத நிலையில் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளார். செய்திகளில் மருத்துவர் கைது என்பதை அறிந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் வந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.