அரசுப் பேருந்து நடத்துநருடன் விளையாட்டு வீரர்கள் மோதல்

அரசுப் பேருந்து நடத்துநருடன் விளையாட்டு வீரர்கள் மோதல்

அரசுப் பேருந்து நடத்துநருடன் விளையாட்டு வீரர்கள் மோதல்
Published on

சென்னையில் நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் அண்ணா சதுக்கத்தில் இருந்து கொளத்தூர் சென்ற அரசுப் பேருந்தில் பயணிகளுக்கும், நடத்துநருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதமாக முற்றவே, பேருந்தில் பயணித்த இளைஞர்கள், நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்துநரும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடத்துநரை தாக்கிய இளைஞர்கள் தெலங்கானாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com