\
இருசக்கர‌ வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து - தாயும் சேயும் உயிரிழப்பு

இருசக்கர‌ வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து - தாயும் சேயும் உயிரிழப்பு

இருசக்கர‌ வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து - தாயும் சேயும் உயிரிழப்பு
Published on

சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாயும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சேர்ந்த சந்திரா, தனது மகன் சக்திவேல், மகள் நித்யா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இந்த விபத்தில் சந்திராவும் அவரது குழந்தைகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வீரகனூர் காவல் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சந்திரா, தெடாவூரிலிருக்கும் தனது கணவரை சந்தித்து குடும்பச் செலவிற்கு பணம் வாங்கச் சென்ற போது இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com