தமிழ்நாடு
அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு
அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு
விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியில் அரசுப் பேருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி சென்றது. கம்மாபுரம் பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த இருசக்கரவாகனம் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோபாலபுரத்தை சேர்ந்த பசுபதி, குமாரமங்கலத்தை சேர்ந்த பிரம்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.