\
காஞ்சிபுரம் அருகே பேருந்து கவிழந்து வி‌பத்து: 30-க்கும் அதிகமான பெண்கள் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே பேருந்து கவிழந்து வி‌பத்து: 30-க்கும் அதிகமான பெண்கள் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே பேருந்து கவிழந்து வி‌பத்து: 30-க்கும் அதிகமான பெண்கள் படுகாயம்
Published on

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த வந்தவாசி சாலையில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலம் பணியாளர்கள் அழைத்து ‌வரப்பட்டனர். இந்த பேருந்து ஆக்கூர் கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவ‌ட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com