மினி பேருந்து மோதி 6 வயது குழந்தை பலி

மினி பேருந்து மோதி 6 வயது குழந்தை பலி

மினி பேருந்து மோதி 6 வயது குழந்தை பலி
Published on

ஆம்பூர் அருகே நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதியதில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மலைக்கிராம பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்- ராசாத்தி தம்பதி. இவர்களின் 6 வயது மகள் வசந்தி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் குழந்தை வசந்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர் பெற்றோர்கள். ரெட்டிதோப்பு பகுதியில் வண்டியை நிறுத்திய கிருஷ்ணன் தனது மகளுடன் வண்டி அருகே நின்றுக்கொண்டிருந்திருக்கிறார். மனைவி மட்டும் அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் நோக்கி வேகமான வந்த மினிப்பேருந்து நின்றுகொண்டிருந்த கிருஷ்ணனின் இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியிருக்கிறது.

இதில் கீழே விழுந்த சிறுதி வசந்தி, மினி பேருந்தின் பின் டயரில் சிக்சி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கிருஷ்ணனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com