\
கல்லூரி பேருந்து- பள்ளி வேன் மோதி விபத்து; நசுங்கிய ஆட்டோ... பள்ளிக் குழந்தைகள் காயம்

கல்லூரி பேருந்து- பள்ளி வேன் மோதி விபத்து; நசுங்கிய ஆட்டோ... பள்ளிக் குழந்தைகள் காயம்

கல்லூரி பேருந்து- பள்ளி வேன் மோதி விபத்து; நசுங்கிய ஆட்டோ... பள்ளிக் குழந்தைகள் காயம்
Published on

திருச்சியில் தனியார் பாலிடெக்னிக் பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து சென்ற தனியார் வேனும், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்கோவில் நோக்கிச் சென்ற தனியார் பாலிடெக்னிக் பேருந்தும் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள குறுக்கு சாலையில நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அருகே இருந்த ஆட்டோ விபத்தில் சிக்கி நசுங்கியது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதி கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும் பத்துக்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்றனர். இவ்விபத்து குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com