\
பள்ளி மாணவனுக்கு சூடு: பெற்றோர் புகார்

பள்ளி மாணவனுக்கு சூடு: பெற்றோர் புகார்

பள்ளி மாணவனுக்கு சூடு: பெற்றோர் புகார்
Published on

சென்னை பல்லாவரம் அருகே தனியார் மழலையர் பள்ளியில் நான்கரை வயது சிறுவனுக்கு சூடு வைக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12ம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தங்கள் மகன் அபிஷேக்கின் தொடையில் சூட்டுக் காயம் இருந்ததாக அவனது பெற்றோர் சுகாஷ் மற்றும் ஆஷா, குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கேட்டதற்கு பள்ளி நிர்வாகத்திடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com