கோவை சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்...

கோவை சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையிலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

விமான நிலையத்தின் உள்நாட்டு விமானங்கள் புறப்படும் பகுதிக்கு அருகிலுள்ள ஆண்கள் கழிவறையில், தூய்மை பணியாளர் செல்வம் என்பவர் மூலம் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பது தெரியவந்தது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.,) துப்பாக்கித் தோட்டாக்களை கைப்பற்றி , பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கி தோட்டாவும், மூன்று 9 எம்.எம். துப்பாக்கி தோட்டக்களும், இரு போலி தோட்டாக்களும் இருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com