\
சைட்லாக் உடைத்து திருடப்பட்ட புல்லட் - சிக்க வைத்த சிசிடிவி

சைட்லாக் உடைத்து திருடப்பட்ட புல்லட் - சிக்க வைத்த சிசிடிவி

சைட்லாக் உடைத்து திருடப்பட்ட புல்லட் - சிக்க வைத்த சிசிடிவி
Published on

வளசரவாக்கம் சாலையில் நின்றிருந்த புல்லட் பைக்கை திருடிய மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை, நெற்குன்றத்தில் உள்ள ஜெயராம் நகரை சேர்ந்த நாகநாதன் (49) ராமாபுரத்தில் டாஸ்மாக் பார் வைத்துள்ளார். இவர் நேற்று இரவு வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தனது புல்லட் பைக்கில் சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு வண்டியை எடுக்கும்போது அது ஸ்டார்ட் ஆகாததால் மெக்கானிக்கை அழைத்தார். இரவு நேரம் என்பதால் யாரும் வரவில்லை. இதனால் தனது பைக்கை அங்குள்ள ஒரு கடையின் ஓரம் நிறுத்தி விட்டு, அருகே இருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் சொல்லி விட்டு சென்றார். 

இன்று தனது பைக்கை எடுத்துச்செல்ல அவர் வந்தபோது, அது நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை. தனது பைக்கை யாராவது திருடியிருக்கலாம் என நினைத்த அவர், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில், அதிகாலையில் பைக் நின்ற இடத்திற்கு வரும் இரண்டு வாலிபர்கள், அதை நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதில் ஒரு வாலிபர் தனது காலால் லாவகமாக பைக்கின் சைட் லாக்கை உடைத்து திருடி செல்லும் காட்சியும் தெளிவாக பதிவாகி உள்ளது. இந்தக் காட்சிகளை கொண்டு திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com