திருப்பூரில் காளை மாடு ஒன்று போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவரை விரட்டி முட்டித் தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூரில், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தும் மாநகராட்சி சாலைப்பகுதிக்கு வந்த காளை மாடு ஒன்றை அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அப்பகுதியிலிருந்து நகர மறுத்த காளை மாடு, போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரை விரட்டிச் சென்று முட்டியது. காளை முட்டியதில் கீழே விழுந்ததால் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது.