தமிழ்நாடு
இலவசமாக வீடு கட்டிக் கொடுங்க: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்
இலவசமாக வீடு கட்டிக் கொடுங்க: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மத்திய அரசின் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை இலவசமாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்பதாக ஏழை மக்கள் கூறுகின்றனர். கூலித்தொழில் செய்து வரும் எங்களுக்கு இது மிகப்பெரிய தொகை என்பதால் தாங்கள் குடியிருக்கும் இடத்திலோ அல்லது அரசின் இடத்திலோ இலவசமாக வீடு கட்டித்தர வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

