அணிவகுத்து செல்லும் காட்டெருமைகள் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

அணிவகுத்து செல்லும் காட்டெருமைகள் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

அணிவகுத்து செல்லும் காட்டெருமைகள் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
Published on

சுற்றுலா தலமான தேக்கடி ஏரிக்கரையில் மேய்ச்சலுக்காக வரும் காட்டெருமைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான தேக்கடியில், பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரிக்கரையில் புதிதாக புற்கள் துளிர்விட்டுள்ளன. பசுமை போர்த்திய அந்த ஏரிக்கரையில், புற்களை உண்ணும் ஆவலோடு காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாய் வந்து மேய்கின்றன. 

வன விலங்குகளை காண்பதற்காகவே தேக்கடி வரும் சுற்றுலா பயணிகள், காட்டெருமைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அத்துடன் ஆர்வமுடன் தொலைவிலிருந்தே அவற்றை புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது போல காட்டெருமைகளும், கூட்டமாக அணிவகுத்து செல்கின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com