\
பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு
Published on

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்கக் கூடாது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவர் சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு காரணமாக 1 கோடியே 78 லட்சம் ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ குற்றஞ்சாட்டியது. மாறன் சகோதரர்கள் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் விடுவிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து சிபிஐ பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சிபிஐ தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ’முழுமையாக விசாரித்த பின்னரே, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட யாரையும் விடுவிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com