பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை
Published on

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் ஆஜராகாத நிலையில், விசாரணை வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை, தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவிக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதிமாறன், தயாநிதிமாறன் மற்றும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் ஆஜராகவில்லை. அதேநேரம் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ‌மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாட வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க மாறன் சகோதரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி வழக்கை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com